சென்னை: தமிழ்நாடு மாநில கூடைப்பந்தாட்ட போட்டியின் பெண்கள் பிரிவில், அரைஸ் ஸ்டீல் கூடைப்பந்தாட்டக் கழக அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகம் மற்றும் சென்னை கூடைப்பந்தாட்டக் கழகத்தின் சார்பில், ஆடவர், மகளிர் பிரிவில், மாநில கூடைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டி, நவ., 3 முதல், நேற்று வரை நடந்தது.அதில், பெண்கள் அணி பிரிவில், அரைஸ் ஸ்டீல் கூடைப்பந்து கழகம், சங்கம் கூடைப்பந்து கழகத்தை, 65க்கு, 64 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. மூன்று, நான்காம் இடங்களை முறையே, ஹிந்துஸ்தான் ஜாம்மர்ஸ் கூடைப்பந்து கழகம், ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கழகம் ஆகியவை பிடித்தன.