பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஐ.டி.ஐ.,யில் ஆவின் பாலகம்

Added : நவ 11, 2019
Share
Advertisement

சென்னை: சுயதொழில் திட்டத்தில், கிண்டி, மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் நடத்தும், ஆவின் பாலகம் திறக்கப்பட்டது.தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும், 'சென்னை யுனிடெட் வே' சேர்ந்து,'மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் திட்டம்' துவங்கி உள்ளது.இத்திட்டத்தில், கிண்டி, அம்பத்துார், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள, அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.நேற்று முன்தினம், பதிவு துறை தலைவர் ஜோதிநிர்மலாசாமி, கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலைய வளாக, 'ஆவின்' பாலகத்தை திறந்து வைத்தார்.இதில், மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு மற்றும் சென்னை யுனிடெட் வே நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.மேலும், ராயபுரம், கண்ணகிநகர், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு, கடை வைத்து கொடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X