பொது செய்தி

தமிழ்நாடு

'தேசிய பிரச்னைக்கு தீர்வு காண தொல்லியல் துறை பெரும் பங்காற்றியது'

Added : நவ 11, 2019
Advertisement

அண்ணா நகர்: 'தேசிய பிரச்னைக்கு தீர்வு காண, தொல்லியல் துறை ஆதாரங்கள் முக்கியமாக இருந்தது பெருமையாக உள்ளது' என, முதியோர் தின விழா நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.தமிழ்நாடு மூத்த குடிமக்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அண்ணா நகர், அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லுாரி வளாக கலையரங்கில், முதியோர் தின விழா நேற்று நடந்தது.இதில், 'இன்றைய சூழலில் முதியோர்கள் போற்றப்படுகின்றனரா அல்லது புறக்கணிக்கப்படுகின்றனரா' என்ற தலைப்பில், சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.உதவித்தொகைமூத்த குடிமக்களுக்கான மாநில கொள்கையை அறிவிப்பது, முதியோர் நலனுக்காக தனி இயக்குனரகம், மாவட்ட மருத்துவமனைகளில் முதியோருக்கான தனிப் பிரிவு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு, நிகழ்ச்சியில் பங்கேற்ற, தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜனிடம் வழங்கப்பட்டது.மேலும், முன்னாள் காவல் துறை தலைமை இயக்குனர் பி.காளிமுத்து, 'கவிதை உறவு' இதழ் ஆசிரியர் எஸ்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மூத்தக் குடிமக்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.ராஜசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், 90 வயது நிரம்பிய முதியோர் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின்போது, அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:இந்தியாவில், 60 வயதை கடந்தவர், 10 சதவீதம் பேர் உள்ளனர்; தமிழகத்தில், 12 சதவீதம் பேர் உள்ளனர்.தற்போது, 33 லட்சம் பேருக்கு, முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஐந்து லட்சம் பேருக்கு வழங்க, அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இரவு காப்பகங்களின் செயல்பாட்டால், மூன்று ஆண்டுகளில், நடைபாதையில் துாங்கும் முதியோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.பெருமைக்குரிய விஷயம்நிகழ்ச்சிக்கு பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் அளித்த பேட்டி:முதியோருக்கான தனி துறை அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். இது, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அயோத்தி வழக்கின் தீர்ப்பில், தொல்லியல் துறை ஆதாரங்கள் பெரும் பங்காற்றின. தேசிய பிரச்னைக்கு தீர்வு காண, தொல்லியல் துறை ஆதாரங்கள் உதவியாக இருந்தது பெருமைக்குரிய விஷயம்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X