சென்னை: 'மெட் பிளஸ்' மருந்து கடைகளில், 'ஜெமிசன் வெல்னெஸ்' நிறுவனத்தின், இயற்கை முறையிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட உள்ளன.இந்தியாவில், மருந்து விற்பனையில், 'மெட் பிளஸ்' முன்னணியில் உள்ளது. இங்கு, 1,700க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் வாயிலாக, மக்களுக்கு தரமான மருந்துகளை விற்பனை செய்து வருகிறது. இயற்கை முறையிலான மருந்துகளை தயாரிக்கும், கனடா நாட்டின், ஜெமிசன்வெல்னெஸ் நிறுவனத்துடன், 'மெட் பிளஸ்' இணைந்துள்ளது.இதன் வாயிலாக, ஜெமிசன் வெல்னெஸ் மருந்துகள், இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த மருந்துகள், உலகளவில், 40 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.இது குறித்து, மெட் பிளஸ் நிறுவனர் மதுகர் காங்கடி கூறுகையில், ''இந்தியாவில், மிகத் தரமான மருந்துகளை விற்பனை செய்து வருகிறோம். அடுத்த முயற்சியாக, ஜெமிசன் வெல்னெஸ் மருந்துகளை விற்பனை செய்ய உள்ளோம்,'' என்றார்.ஜெமிசன் வெல்னெஸ் நிறுவன தலைவர் மார்க் ஹெர்நிக் கூறுகையில், ''மெட் பிளஸ் நிறுவனத்துடன் சேர்ந்து, இந்தியாவில் மருந்து விற்பனை செய்யப்படுவதை பெருமையாகக் கருதுகிறோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE