சென்னை: ''உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதால், நீரிழிவு நோயை தடுக்க முடியும்,'' என, டாக்டர் மோகன் பேசினார்.உலக நீரிழிவு தினத்தையொட்டி, டாக்டர் மோகன் நீரிழிவு மையத்தில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், நீரிழிவு நோயில் இருந்து மீண்டவர்கள், தாங்கள் சாதித்தது குறித்து விளக்கினர்.நிகழ்ச்சியில், டாக்டர் மோகன் நீரிழிவு மைய தலைவர் டாக்டர் மோகன் பேசியதாவது:நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, போதியளவில் விழிப்புணர்வு இல்லாத கிராமப்புற மக்களிடம், நீரிழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.மேலும், அவர்களுக்கு குறைந்த செலவில், தரமான மருத்துவச் சிகிச்சைகளை அளித்து வருகிறோம். உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் வாயிலாக, நீரிழிவு நோயை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE