. ஸ்ரீவி., வழக்கறிஞர் குமாஸ்தா வீட்டில் 29 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளை தொடரும் திருட்டால் மக்கள் அச்சம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

. ஸ்ரீவி., வழக்கறிஞர் குமாஸ்தா வீட்டில் 29 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளை தொடரும் திருட்டால் மக்கள் அச்சம்

Added : நவ 11, 2019
Share
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் வழக்கறிஞர் குமாஸ்தா வீட்டின் கதவை உடைத்து, பீரோவிலிருந்த 29 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டுஉள்ளது. தொடரும் திருட்டால் ஸ்ரீவி.,மக்கள் அச்சமடைந்துள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த கோர்ட்டின் எதிரே முல்லை நகரில் வசிப்பவர் முனியாண்டி 55. வழக்கறிஞர் குமாஸ்தாவாக உள்ளார். நேற்று முன்தினம்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் வழக்கறிஞர் குமாஸ்தா வீட்டின் கதவை உடைத்து,
பீரோவிலிருந்த 29 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டுஉள்ளது. தொடரும் திருட்டால் ஸ்ரீவி.,மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த கோர்ட்டின் எதிரே முல்லை நகரில் வசிப்பவர் முனியாண்டி 55. வழக்கறிஞர் குமாஸ்தாவாக உள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிவிட்டு,
டவுனில் உள்ள சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார். பின்னர் நேற்று காலையில் வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கிரில் கேட்டும், அதனையடுத்த மரக்கதவும் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோக்கள் திறக்கப்பட்டு, உடைகள் மற்றும்
பொருட்கள் சிதறி கிடந்தது.இதில் பீரோவிலிருந்த 29 பவுன் நகை மற்றும் ரூ.ஒரு லட்சத்து
50 ஆயிரம் ரொக்கப்பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அவர் ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். சம்பவ வீட்டினை
விருதுநகர் எஸ்.பி.,பெருமாள் பார்வையிட்டார்.டவுன் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ்
விசாரித்தார்.கடந்த சில வாரங்களில் மட்டும் 4 இடங்களில் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X