ஆட்டோவில் குழந்தைகள் கண்காணிப்பு அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோவில் குழந்தைகள் கண்காணிப்பு அவசியம்

Added : நவ 11, 2019
Share
அடையாறு: 'ஓட்டுனர் இருக்கை, பக்கவாட்டு கம்பியில் பள்ளி குழந்தைகள் அமர வைக்கும் ஆட்டோக்களை தவிர்க்க வேண்டும்,' என, பெற்றோருக்கு, போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.அடையாறில், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இளைஞர் விடுதி உள்ளது.இங்கு, போக்குவரத்து போலீசார், நேற்று, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில், ஆட்டோ

அடையாறு: 'ஓட்டுனர் இருக்கை, பக்கவாட்டு கம்பியில் பள்ளி குழந்தைகள் அமர வைக்கும் ஆட்டோக்களை தவிர்க்க வேண்டும்,' என, பெற்றோருக்கு, போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.அடையாறில், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இளைஞர் விடுதி உள்ளது.இங்கு, போக்குவரத்து போலீசார், நேற்று, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில், ஆட்டோ ஓட்டுனர்கள், வியாபாரிகள், கல்லுாரி மாணவர்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.அடையாறு போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இட்லர், போக்குவரத்து விதிமீறல் சட்டம் குறித்து பேசினார்.போலீசார் கூறியதாவது: ஓட்டுனர் இருக்கை, பக்கவாட்டு கம்பியில் பள்ளி குழந்தைகளை அமர செய்தால் ஆபத்து அதிகம் உள்ளது. அதுபோன்ற ஆட்டோக்களை, பெற்றோர் தவிர்க்க வேண்டும். கல்லுாரி மாணவர்கள், தங்கள் எதிர்காலத்தை கருத்தில் வைத்து, வாகனத்தைஎச்சரிக்கையாக ஓட்ட வேண்டும்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X