தற்கொலை மிரட்டல் வாலிபரால் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை மிரட்டல் வாலிபரால் பரபரப்பு

Added : நவ 11, 2019
Share
போரூர்: போரூரில், உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால்பரபரப்பு ஏற்பட்டது.போரூர் ஏரி வழியாக, உயர் அழுத்த மின்கம்பங்கள் செல்கின்றன. அதில் வாலிபர் ஒருவர் ஏறி நின்று, தற்கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற நுண்ணறிவு பிரிவு காவலர் டார்வின், அந்த வாலிபரிடம் சாமர்த்திய மாக பேசி, அவரை கீழே இறங்க
 தற்கொலை மிரட்டல் வாலிபரால் பரபரப்பு

போரூர்: போரூரில், உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால்பரபரப்பு ஏற்பட்டது.போரூர் ஏரி வழியாக, உயர் அழுத்த மின்கம்பங்கள் செல்கின்றன. அதில் வாலிபர் ஒருவர் ஏறி நின்று, தற்கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற நுண்ணறிவு பிரிவு காவலர் டார்வின், அந்த வாலிபரிடம் சாமர்த்திய மாக பேசி, அவரை கீழே இறங்க செய்தார்.விசாரணையில், தற்கொலை மிரட்டல் விடுத்த நபர், போரூர், சிவன் கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பாண்டி, 32, என தெரிய வந்தது. இவர், வெல்டிங் வேலை செய்து வருகிறார்.மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, குடிபோதையில், உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த நபருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X