சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி தலைமை காவலர் பலி ரேசில் ஈடுபட்ட வாலிபர் கைது

Added : நவ 11, 2019
Share
Advertisement

சென்னை: கார் மோதி தலைமைக் காவலர் பலியானதை அடுத்து, ரேசில் ஈடுபட்ட வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.குரோம்பேட்டை, நியூகாலனி, மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர், ரமேஷ், 46. இவர், சேலையூர் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார்.இவரது, மனைவி சுமதி. இவருக்கு, காயத்ரி, 21, மோனிஷா, 20, மற்றும் கீர்த்தனா, 18 என, மூன்று மகள்கள் உள்ளனர்.அதிவேகம்நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு பணி முடித்து, ரமேஷ் தன், 'பஜாஜ் டிஸ்கவர்' இருசக்கர வாகனத்தில், வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். செல்லும் வழியில், மேற்கு தாம்பரம் பணிமனை அருகே, பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல் போட வாகனத்தை திருப்பினார். அப்போது, அதிவேகமாக வந்த, 'ஹோண்டா சிவிக்' கார் மோதியதில், கை, கால்கள் மற்றும் தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார்.வழக்கு பதிந்த, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார், கார் ஓட்டுனரான, ஊரப்பாக்கம், காரணை புதுச்சேரியைச் சேர்ந்த, ஆதித்யா, 21, என்பவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட ஆதித்யா, காட்டாங்கொளத்துாரில் உள்ள தனியார் கல்லுாரியில், இளநிலை, மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.மயிலாப்பூர் சென்று, வீட்டிற்கு வரும் வழியில், மற்றொருவருடன் சேர்ந்து, பல்லாவரத்தில் இருந்து, கார் ரேசில் ஈடுபட்டதாக தெரிகிறது.தப்ப முயற்சிஅதிவேகத்தில் வந்த அவரது கார், சாலையோரத்தில் இருந்த தடுப்புகளில் மோதி, பின் ரமேஷின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், அவர் இறந்துள்ளார்.விபத்து நடந்தபோது, ஆதித்யாவுடன் அவரதுநண்பர் விக்னேஷ் என்பவரும் இருந்ததாக கூறப்படுகிறது.ரமேஷ் மீது மோதிய கார், அருகில் உள்ள மசூதி அருகே, பழுதாகி நின்றுள்ளது. தொடர்ந்து, காரை இயக்க முடியாததால், காரை அங்கேயே விட்டு, இருவரும் தப்ப முயன்று உள்ளனர்.அப்போது, போலீசார் ஆதித்யாவை கைது செய்தனர்; விக்னேஷை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆதித்யாவின், தாய் பத்மஸ்ரீ என்பவர், ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி என, கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X