பொது செய்தி

தமிழ்நாடு

இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., இணைப்புக்கு சாத்தியகூறுகள் ஆய்வு

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019
Advertisement
 இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., இணைப்புக்கு சாத்தியகூறுகள் ஆய்வு

கிழக்கு கடற்கரை சாலை - பழைய மாமல்லபுரம் சாலை இணைப்பு பாதை திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து, 16 இடங்களில் ஆய்வு செய்யப்பட உள்ளது.

சென்னை பெருநகரில், பல்வேறு இடங்களில் போக்குவரத்து மேம்பாட்டுக்காக, புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன.கிளை சாலைகள்இதில், பிரதான சாலைகளை இணைக்கும், கிளை சாலைகளை அமைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வகையில், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய இரண்டும் இணையாக செல்கின்றன.இந்த இரண்டு சாலைகளுக்கு இணைப்பு இல்லாததால், ஒரு சாலையை பயன்படுத்துவோர் இன்னொரு சாலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.இதை கருத்தில் வைத்து, இந்த சாலைகளை இணைக்கும் பாதைகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.

இதற்கான திட்ட அறிக்கை தயாரிப்புஉள்ளிட்ட பணிகளுக்காக, கலந்தாலோசகர் தேர்வு பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கியுள்ளது. இதற்கான டெண்டரில் பங்கேற்க, நான்கு கலந்தாலோசனை நிறுவனங்கள் முன்வந்து உள்ளன.திட்ட அறிக்கைஇந்நிறுவனங்களுக்கு, திட்டம் குறித்த விளக்கம் அளிக்கும் கூட்டம் சமீபத்தில் நடந்தது.

இதில் இணைப்பு பாதை திட்டத்துக்காக, 16 இடங்களில், போக்குவரத்து சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், புவியியல் சார்ந்த ஆய்வுகள் தனியாக மேற்கொள்ள வேண்டியதில்லை என்றும் கலந்தாலோசகர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.இதில் தேர்வு செய்யப்படும் கலந்தாலோசனை நிறுவனம், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X