பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி மாநிலத்தில் ராமநாதபுரம் 3 ம் இடம்

Added : நவ 11, 2019
Advertisement

பரமக்குடி: இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி சேவையில், ராமநாதபுரம் மாவட்டம்
மாநிலத்தில் 3 ம் இடம் வகிக்கிறது.

பரமக்குடி தலைமை அஞ்சலகத்தில் இச்சேவை குறித்தவிழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தலைமை அஞ்சல் அதிகாரி ராமமூர்த்தி தலைமை வகித்தார். விற்பனை மேலாளர் பாலு
வரவேற்றார். இதில் கலந்து கொண்ட பரமக்குடி எம்.எல்.ஏ., சதன்பிரபாகருக்கு 2 நிமிடத்தில் கணக்கு துவக்கி கொடுக்கப்பட்டது.

முதுநிலை மேலாளர் முருகேசன் பேசியதாவது: இத்திட்டத்தில்குறைந்த பட்ச இருப்பு தொகை தேவையில்லை. கணக்கு துவங்கஆதர் எண் போதுமானது. எல்லா அஞ்சலகத்திலும்
பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 306 அஞ்சலகத்தில் 264
அலுவலகத்தில் இச்சேவையை பெறலாம்.

மாவட்டத்தில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சம்பளம் பெறும் 10 ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர்,முதியோர் உதவித் தொகை பெறும் 6ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என
பரமக்குடியில் 10 ஆயிரம் கணக்குகள் உட்பட, மாவட்டத்தில்27 ஆயிரம் கணக்குகள்
துவங்கப்பட்டுள்ளது.இச்சேவை மூலம் ராமநாதபுரம் மாவட்டம் தமிழக அளவில் 3 ம்
இடமும்,மதுரை மண்டலத்தில் முதலிடத்திலும் உள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X