ஆவடி: குருவிகளாக செயல்பட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர்.ஆவடியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், நேற்று முன்தினம் இரவு, பொருட்கள் வாங்க வந்த இருவர் மேல் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.அவர்களது உடைமை களை சோதனை செய்த தில், பொருட்களை மறைத்து எடுத்துச் செல்ல இருந்தது தெரியவந்தது.நாடு விட்டு நாடுஇது குறித்த புகாரின் அடிப்படையில், ஆவடி போலீசார் விசாரித்தனர்.இதில், இலங்கை தலைநகர் கொழும்புவைச் சேர்ந்த முகமது தாஜுதீன், 44, சிக்கந்தர் பாஷா, 60, ஆகியோர் என்பதும், நாடு விட்டு நாடு, பொருட்களை கடத்தி செல்லும், 'குருவி'களாக செயல்பட்டதும் தெரிய வந்தது.இந்நிலையில், பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டதால், சென்னை, மண்ணடி பகுதியில் தங்கியுள்ளனர்.சொந்த நாட்டிற்கு செல்ல வழியில்லாததால், துணி வியாபாரம் செய்துள்ளனர்.'எக்ஸிட் பாஸ்போர்ட்' செலவிற்கு பணம் இல்லாதபோது, கடைகளில் பொருட்களை திருடி பிழைத்து வந்து உள்ளனர்.அதுபோல், ஆவடியில் பொருட்கள் திருடியபோது சிக்கினர்.தொடர்ந்து, இலங்கை துாதரக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'அவர்கள் இருவர் மீதும், குற்ற வழக்குகள் இல்லாததால், 'எக்ஸிட் பாஸ்போர்ட்' கொடுத்து, தாயகம் அனுப்பப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE