கானத்துார்: லாரி மீது, இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பெண் பலியானார்.குன்றத்துாரைச் சேர்ந்தவர் விக்னேஷ், 23. போரூரைச் சேர்ந்தவர் டிஸ்ஷா, 20. இருவரும், ஓராண்டாக காதலித்து வந்தனர். நேற்று, இருவரும் இருசக்கர வாகனத்தில், கோவளம் சென்று, வீடு நோக்கி புறப்பட்டனர். டிஸ்ஷா, வாகனத்தை ஓட்டினார்.இ.சி.ஆர்., உத்தண்டி அருகில் சென்றபோது, சாலை ஓரம் நின்றிருந்த லாரி மீது, இருசக்கர வாகனம் வேகமாக மோதியது. இதில், டிஸ்ஷா சம்பவ இடத்திலேயே பலியானார்; விக்னேஷ், காயமடைந்தார்.அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE