காரைக்குடி:காரைக்குடி
பர்மா காலனியில் மீன் மார்க்கெட்டிற்கு போட்டியாக மீன் வியாபாரி
கிலோ ரூ.1 க்கு நேற்று மீன் விற்பனை செய்ததால், அதை வாங்குவதற்காக
நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இங்கு, நேற்று புதிதாக மீன் கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடையை மனோகரன் நடத்தி வருகிறார்.கடை
திறப்பு விழா சலுகையாக நேற்று ஒரு நாள் மட்டுமே முதலில் வரும் 100
வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ மீன் 1 ரூபாய்க்கு விற்பனை செய்தார்.
100 பேருக்கு மேல் வரும் அடுத்த 100 பேர்களுக்கு 'டிபன்பாக்ஸ்' கிப்ட்
வழங்கினார். இதனால் சலுகை விலையில் மீன்களை வாங்க,
வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.
இது
குறித்து வியாபாரி மனோகரன் கூறியதாவது: இந்த சலுகை விலை விற்பனை,
விளம்பர, வியாபார நோக்கத்திற்காக அல்ல. முற்றிலும் மீன்
வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்பதை சுட்டிக்காட்ட
வழங்கினேன். நகராட்சி மீன் மார்க்கெட்டில் வெளி மாவட்ட வியாபாரிகள்
குறைந்த விலைக்கு மீன் விற்பதாக பொய் பிரசாரம் செய்து, எங்கள்
வியாபாரத்தை பாதிக்க செய்து விட்டனர். காரைக்குடி வியாபாரிகள் கடை கேட்டால் தர மறுக்கின்றனர்.
எங்களாலும் குறைந்த விலைக்கு மீன் விற்க முடியும் என்பதை நிரூபிக்கவே கிலோ ஒரு ரூபாய்க்கு துவக்க நாளில் வழங்கினேன். ஞாயிறு தோறும் வாங்கிய விலைக்கே மீன்களை விற்க முன்வந்துள்ளேன், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE