பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல் கண்காட்சி

Added : நவ 11, 2019
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகேயுள்ள அழகன்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கிடையேயான 11வது அறிவியல் கண்காட்சி நடந்தது.

அழகன்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளிகளுக்கிடையேயான 11
அறிவியல் கண்காட்சி நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட
பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். காரைக்குடி அழகப்பா பல்கலை மண்ணியல் துறை தலைவர் கரிகாலன் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார்.

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரித்த நஜியா மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதல் பரிசை வென்றனர். நுண்ணோக்கியின் புதிய பரிமாணம் படைப்பிற்கு கிருஷ்ணா மெட்ரிக் பள்ளிக்கு இரண்டாமிடமும், கழிவுநீர் மேலாண்மை படைப்பிற்கு நேஷனல் அகாடமி பள்ளிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் பள்ளி நிறுவனர் கலிபுல்லாஹ் கான், தாளாளர் பவுசுல் ஹானியா, துணைத் தலைவர்
முகமது ஷராபத்துல்லாஹ் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X