சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

Added : நவ 11, 2019
Share
Advertisement

மானாமதுரை:மானாமதுரை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 வாகனங்களை போலீசார்
பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மானாமதுரையில் மதுரை-ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் மானாமதுரை வி.ஏ.ஒ(பொ)
முத்துக்குமார்,தலையாரி பெருமாள் ஆகியோர் மணல் திருட்டு சம்மந்தமாக ரோந்து சென்ற போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியில் அரசு அனுமதியின்றி இரண்டரை யூனிட் மணல் அள்ளி வந்துள்ளனர்,

அப்போது லாரியை நறுத்த சொல்லிய போது டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு ஓடி
விட்டதாகவும்,பின்னர் வி.ஏ.ஒ(பொ) முத்துக்குமார் மானாமதுரை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கிருஜ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி,சீனியப்பா நகரைச் சேர்ந்த
சடையப்பன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று மானாமதுரை-தஞ்சாவூர் ரோட்டில் தயா நகர் அருகே மினி வேனில் 1 யூனிட் அளவு ஆற்று மணல் அள்ளி வந்ததை ரோந்து சென்ற மானாமதுரை சிப்காட் போலீசார் தடுத்தி நிறுத்தி வேனை பறிமுதல் செய்து உரிமையாளர் சசி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X