பொது செய்தி

இந்தியா

தேஜஸ் ரயில்; முதல் மாத லாபம் ரூ.70 லட்சம்

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லி - லக்னோ இடையே, முதல் முதலாக தனியார் மூலம் இயக்கப்படும், 'தேஜஸ்' ரயில், முதல் மாதத்தில், 70 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.



latest tamil news



டில்லி - உத்தர பிரதேச தலைநகர், லக்னோ இடையே, அதி நவீன வசதிகள் கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க, ரயில்வே முடிவு செய்தது. மேலும், இந்த ரயிலை இயக்கும் பொறுப்பை, இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.இதன் மூலம், தனியார் இயக்கும், முதல் ரயில் என்ற பெருமையை, தேஜஸ் எக்ஸ்பிரஸ் பெற்றது. இந்த ரயில் சேவை, கடந்த மாதம், 5ம் தேதி துவங்கியது. வாரத்தில், செவ்வாய் கிழமை தவிர, மற்ற நாட்களில், இந்த ரயில் இயக்கப்படுகிறது.


latest tamil news



தேஜஸ் ரயிலில் பயணிப்பவர்களுக்கு, 25 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும், வெளிநாடுகளில் உள்ளதை போல, ரயில் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டால், பயணியருக்கு, ஒவ்வொரு மணி நேரத்திற்கும், தாமதத்திற்கான இழப்பீடு தொகை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அனைத்துப் பெட்டிகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட தேஜஸ் ரயிலில், சாதாரண இருக்கை வசதிக்கு, 1,280 ரூபாயும், 'எக்ஸ்சிக்யுட்டிவ்' இருக்கை வசதிக்கு, 2,450 ரூபாயும், கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில், தேஜஸ் ரயில், தன் முதல் மாதத்தில் மட்டும், 70 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.இது பற்றி ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த மாதம், 5ம் தேதி முதல், 28ம் தேதி வரை, மொத்தம், 21 நாட்கள், தேஜஸ் ரயில் இயக்கப்பட்டது, ரயிலில் தினமும், சராசரியாக, 80 - 85 சதவீத இடங்கள் நிரம்பின. ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு, ரயில் டிக்கெட் விற்பனை மூலம், 3.70 கோடி ரூபாய் கிடைத்தது. இதில், 3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-நவ-201901:33:15 IST Report Abuse
ஆப்பு தண்டவாளம், ரயில், ஸ்டேஷன்கள், சிக்னல் எல்லாம் எப்பவோ போட்டது. புது பஸ் மாதிரி நவீன ரயில் பொட்டிகளையும் நம்ம காசிலே வாங்கிக் குடுத்துட்டு தனியாரே ஓட்டுங்க, லாபம் ஈட்டுங்கள்னு குடுத்துருவாங்க. நல்லா ஓட்டுவாங்க.
Rate this:
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
11-நவ-201917:44:17 IST Report Abuse
ezhumalaiyaan லாபம் ஈட்டியதை? அல்லது வசூல் கணக்கா? ரயில்வே தொழிலாளர்களுக்கு தரப்படும் சம்பளம் எந்தக்கணக்கிலிருந்து தரப்படுகிறது. ஆகவே லாப நஷ்டக்கணக்கு கணக்கிடமுடியாது.தவறான தகவல்.
Rate this:
Cancel
வால்டர் - Chennai,இந்தியா
11-நவ-201910:47:19 IST Report Abuse
வால்டர் கேள்வில ஒன்னும் தப்பில்லையே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X