பொது செய்தி

தமிழ்நாடு

வைகை ஆற்றின் கரையில் தேக்கு மரம் வனத்துறை புது முயற்சி

Added : நவ 11, 2019
Advertisement

திருப்புவனம்:திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் தேக்கு மரம் நடவு செய்யும் பணியை வனத்துறையினர் துவக்கியுள்ளனர்.

திருப்புவனம் நகரில் சேகரமாகும் கழிவுகள், குப்பைகளை வைகை ஆற்றிற்குள் கொட்டி மாசு ஏற்படுத்துகின்றனர். பல முறை பேரூராட்சி எச்சரித்தும் குப்பை கொட்டுவதை நிறுத்தவில்லை. இதனால் ஆற்றின் இரு கரையிலும் பாலிதீன் கழிவுகள் தேங்கி, சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்கும் விதமாக ஆற்றின் இரு கரையிலும் தேக்கு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி திருப்புவனம் புதுார் பகுதியில் வைகை ஆற்றங்கரையில் 12 ஆயிரம் மரக்கன்றுகளை நட உள்ளனர். இதற்காக ஆற்றங்கரையை சுத்தம் செய்து, நட்டு வருகின்றனர்.

வன அலுவலர் கோபிநாத் கூறியதாவது: ஆற்று கரையை பலப்படுத்தும் நோக்கில் தேக்கு
மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். இதை 30 ஆண்டு பராமரிக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X