சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர் திருடியவர்கள் ஓட்டம்

Added : நவ 11, 2019
Share
Advertisement

இளையான்குடி:இளையான்குடி அருகே திருடிய டூவீலரை திருடர்கள் ஓட்டிச் செல்லும் போது எதிரே போலீசார் வாகன சோதனை செய்ததை பார்த்து டூவீலரை போட்டு விட்டு தப்பினர்.

இளையான்குடி அருகே உள்ள தளிர்தலை கிராமத்தைச் சேர்ந்த சவரிமுத்து மகன் தனசாமி 43,இவர் சாலையூரில் தனது டூவீலரை நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்த்த போது டூவீலரை காணவில்லை. இளையான்குடி போலீசில் புகார் கொடுத்தார்.இந்த டூவீலரை திருடிய
திருடர்கள் மானாமதுரை ரோட்டில் ஓட்டிச் சென்ற போது எதிரே போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டிருப்பதை பார்த்தவுடன் டூவீலரில் வந்தவர்கள் டூவீலரை அதே இடத்தில் போட்டு விட்டு தப்பி விட்டனர்.

போலீசார் அந்த டூவீலரை கைப்பற்றி தனசாமியிடம் ஓப்படைத்து தப்பி ஓடிய திருடர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X