சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாமதமாகும் சாலைப்பணி: கிராமத்தினர் தவிப்பு

Added : நவ 11, 2019
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அருகே சாலை அமைக்கும் பணி தாமதமாவதால் தங்களின்
கிராமங்களுக்கு செல்ல அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.

காஞ்சிரங்கால் விலக்கில் இருந்து அரசனிப்பட்டி செல்லும் சாலை பல மாதங்களாக
பழுதடைந்து வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் இருந்தது. பொதுமக்களின்
கோரிக்கையை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி துவங்கியது.ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு இயந்திரம் மூலம் சாலை கிளறப்பட்டு, கற்கள் கொட்டப்பட்டது.

ஆனால் அடுத்தகட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அவ்வழியாக நடந்து
செல்பவர்களும், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்களும் கடும் சிரமத்துக்கு
ஆளாகிவருகின்றனர். குறிப்பாக அரசனிபட்டி, வத்ஸாபட்டி, பொன்னாம்பட்டி கிராம மக்கள்
இச்சாலையை பயன்படுத்த முடியாமல் அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு சென்று சுற்றி
வருகின்றனர்.

அப்பகுதி மக்கள் கூறியதாவது: சாலை பெயர்க்கப்பட்டு கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் மூன்று மாதமாக கிராமங்களுக்கு ஆட்டோ கூட வருவதில்லை. நடந்து செல்லும் போது கற்கள் குத்தி கால்கள் பாதிக்கப்படுகிறது. சாலைப்பணியை தாமதிக்காமல் உடனடியாக முடிக்கவேண்டும், என்றனர்.

ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறும்போது, விரைவில் பணிகள் முடிக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X