அருப்புக்கோட்டை குடிநீருக்கு ராட்சத குழாய் திருப்புவனம் மக்கள் எதிர்ப்பு

Added : நவ 11, 2019
Advertisement

திருப்புவனம்:திருப்புவனத்தில் இருந்து அருப்புக்கோட்டைக்கு கூடுதலாக ராட்சத குழாய்
பதிப்பதற்கு பொதுமக்களின் கருத்தை கேட்காமலேயே நகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

திருப்புவனம் வைகை ஆற்றில் இருந்து அருப்புக்கோட்டைக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் எடுத்து செல்கின்றனர். தினமும் 40 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்து செல்கின்றனர்.
அருப்புக்கோட்டைக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்தும், கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருப்பதால், நகராட்சி அதிகாரிகள் திருப்புவனம் பகுதி வைகை ஆற்றில் இருந்து கூடுதலாக ராட்சத குழாய் பதித்து குடிநீர் எடுத்து செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கூடுதலாக குழாய் பதிப்பதற்கு முன் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் சிவகங்கை மாவட்ட எல்லையில் குழாய் பதிக்கும் முன் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன.

ஆனால் இன்று வரை கருத்து கேட்பு கூட்டம் நடத்தவே இல்லை. நகராட்சி அதிகாரிகள் போலீசார் துணையுடன் குழாய் பதிக்கும் பணியை தொடங்கினர். தகவலறிந்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன.

அப்பகுதி மக்கள் கூறியதாவது:

திருப்புவனத்தில் நாள் ஒன்றுக்கு காலை, மாலை 30 நிமிடம் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.
அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்லும் பாதையில் உள்ள வெள்ளக்கரை, மேலராங்கியம் கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏற்கனே தினமும்
40 லட்சம் லிட்டர் குடிநீர் உறிஞ்சப்படும் நிலையில, கூடுதலாக ராட்சத குழாய் பதிக்க
முயற்சிக்கின்றனர். இதை தடுக்க கோரி கலெக்டரிடம் புகார் செய்வோம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X