மாவட்ட தடகள போட்டி இளையான்குடி பள்ளி சாதனை

Added : நவ 11, 2019
Advertisement

இளையான்குடி:மாவட்ட அளவிலான தடகளப்போடிகளில் வெற்றி பெற்று இளையான்குடி மேல்நிலை பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தேவகோட்டையில் நடந்த இப்போட்டியில், பள்ளி பிளஸ்1 மாணவர் அர்சத்கான் 100 மீ, 200 மீ., ஓட்டத்தில் முதலிடம் பிடித்தார். ஈட்டி எறிதலில் பிளஸ் 2 மாணவர் முகம்மது இம்தியாஸ் 3 ம் இடம் பிடித்தார். 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் கால்பந்து போட்டியில், 2 ம் இடம் பிடித்தனர். 14 மற்றும் 17 வயதினருக்கான கூடைப்பந்து போட்டியிலும் மாணவர்கள் 3ம் இடம் பிடித்தனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் இப்ராகிம்சா, உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளி தாளாளர் முசாபர் அப்துல்ரகுமான், தலைர்
சைய்யது கான்முகமது,தலைமை ஆசிரியர் முகம்மது இலியாஸ் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X