ஆட்டோக்களால் டவுன் பஸ்களுக்கு வருவாய் இழப்பு

Added : நவ 11, 2019
Advertisement

திருப்புவனம்:திருப்புவனத்தில் இருந்து மதுரைக்கு விதிகளை மீறி ஏராளமான ஷேர்
ஆட்டோக்கள், ஆட்டோக்கள் ஓடுவதால், அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இங்குள்ள மதுரை அரசு போக்குவரத்து கிளையில் இருந்து தினமும் 44 டவுன்பஸ்கள் மதுரை உட்பட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. ஒவ்வொரு பஸ்சும் தினமும் 4 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டின. தற்போது விதிகளை மீறி மதுரைக்கு ேஷர்ஆட்டோ, ஆட்டோக்களை இயக்குவதால், பயணிகள் பெரும்பாலும் அங்கு சென்றுவிடுகின்றனர்.

இதனால் பஸ்சில் பயணிகள் வரத்து குறைந்து, நாள் ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய் வருவாய்
ஈட்டுவதே சிரமமாக உள்ளது. தினமும் காலை 8:00 மணியில் இருந்து அரசு பஸ்கள் செல்ல முடியாத அளவிற்கு ஆட்டோக்கள் ஆக்கிரமித்து நிற்கின்றன.எனவே அரசு போக்குவரத்து
கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க, விதியின்றி ஓடும் ஆட்டோக்களின் லைசென்ஸ்களை ரத்து செய்ய, போலீஸ், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முன்வரவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X