பொது செய்தி

தமிழ்நாடு

கீழடி அகழாய்வு தளம் மூடல்

Added : நவ 11, 2019
Advertisement

திருப்புவனம்:கீழடி அகழாய்வு தளம் செல்லும் பாதை அடைக்கப்பட்டதால், தினமும்
பார்வையிட செல்லும் வரலாற்று ஆர்வலர்கள், மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி
செல்கின்றனர்.

இங்கு 5ம் கட்ட அகழாய்வு ஜூன் முதல் அக்டோபர் வரை நடந்தது. இதில் சுடுமண் குழாய்,
வட்டப்பானை, இரட்டைச்சுவர் உட்பட 900 பொருட்கள் கண்டறியப்பட்டன.இங்கு 2600
ஆண்டுகளுக்கு முன் பண்டைய தமிழர்களின் வாழ்விடங்கள், பயன்படுத்திய பொருட்களை நேரில் காணும் ஆவலுடன் ஏராளமான வரலாற்று ஆர்வலர்கள்,மாணவர்கள் வந்து சென்றனர்.

அகழாய்வு முடிந்து குழிகள் மூடப்பட்டாலும் பார்வையிட வருகின்றனர். இங்கு
அருங்காட்சியகம் கட்டுவதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.இது குறித்து

அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: அடுத்த கட்ட அகழாய்வு பணி துவங்கவில்லை.
பார்வையாளர்கள் வருகையால், பிற நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை
ஏற்படுகிறது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X