தமிழ்நாடு

வீணாகுது அரசின் நோக்கம் : பயன்படுத்தப்படாத தனிநபர் கழிப்பறை:திறந்தவெளியை நாடுகிறார்கள் மக்கள்

Added : நவ 11, 2019
Advertisement

காரியாபட்டி:திறந்தவெளி பயன்பாட்டால் ஏற்படும் சுகாதாரக்கேடை தவிர்க்க, முழு சுகாதார திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட, தனிநபர் கழிப்பறையை முறையாக பயன்படுத்தாமல் மீண்டும்
திறந்தவெளியை நாடி செல்வதால் தொற்று கிருமிகள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் திறந்தவெளி கழிப்பறையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, தொற்று கிருமிகள் பரவி, பல்வேறு நோய்கள் தாக்கின.

மத்திய அரசின் ஸ்வாச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், மாநில அரசு பங்களிப்புடன்,முழு
சுகாதார திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்ட, சிறு, குறு விவசாயிகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இத்திட்டத்தில், தகுதியானவர்கள் உட்பட தகுதியற்றவர்களும் தேர்வு செய்யப்பட்டு, ஏற்கனவே வீடுகளில் கட்டியிருந்த
கழிப்பறைக்கு முன் போட்டோ எடுத்து, பயன்பெற்றனர். பெரும்பாலானோர் தரமாக
கட்டவில்லை. இதனால் கழிப்பறை சில நாட்களிலே சேதமடைந்தது.

நல்ல திட்டம், முழுமை அடையாமல், அரசு நிதி வீணடிக்கப்பட்டது. இதில் நுாறு சதவீதம் நிறைவேற்றப்பட்ட ஊராட்சிகள் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்து, சிறப்பு நிதி ரூ.2 லட்சம் வழங்கி, அரசு ஊக்குவிக்கிறது.

இந்நிலையில் தனிநபர் கழிப்பறை பயன்பாடு குறைந்து, மீண்டும் திறந்தவெளியை நாடுவதால், தொற்று கிருமிகள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதாரக்கேடு ஏற்படாமல் தவிர்க்க தனிநபர் கழிப்பறையை சீரமைத்து உரிய முறையில் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X