மதுபாட்டில்கள் பறிமுதல்; 7 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபாட்டில்கள் பறிமுதல்; 7 பேர் கைது

Added : நவ 11, 2019
Share
விருதுநகர்:மிலாடி நபியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விருதுநகரில் விதிமீறி பார்களில் மதுவிற்பதாக மேற்கு போலீசாருக்கு தகவல் வந்தது.விருதுநகரில் ஆனைக்குழாய் தெரு, மாலைப்பேட்டை தெரு, மதுரை ரோடு, மீனாம்பிகை பங்களா ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள பார்களில் போலீசார் நடத்திய சோதனையில் மதுபாட்டில்கள்

விருதுநகர்:மிலாடி நபியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் விருதுநகரில் விதிமீறி பார்களில் மதுவிற்பதாக மேற்கு போலீசாருக்கு தகவல் வந்தது.விருதுநகரில் ஆனைக்குழாய் தெரு, மாலைப்பேட்டை தெரு, மதுரை ரோடு,
மீனாம்பிகை பங்களா ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள பார்களில் போலீசார் நடத்திய
சோதனையில் மதுபாட்டில்கள் விதிமீறி விற்ற மெட்டுக்குண்டுவைசேர்ந்த தாவீது 47,விருதுநகர் ஏ.டி.பி., காம்பவுண்டைச் சேர்ந்த சோனை கருப்பு 40, அன்னை சிவகாமிபுரத்தைச் சேர்ந்த அசோக்பாண்டி 24, இந்திராநகரைச் சேர்ந்த சுப்ரமணி 69 ஆகிய நால்வர் பிடிபட்டனர். இதில் 80 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

சாத்துார்

சாத்துார் அருகே இருக்கன்குடி அச்சுனாநதியின் தென்கரையில் என்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த குமார் 30, பால்ராஜ் 40, 180 மி.லி.,அளவு கொண்ட தலா 8 மது பாட்டில்கள் வைத்து விற்பனை
செய்தனர். மேலும் நென்மேனி பஸ்ஸ்டாப் அருகில் செட்டுடையான்பட்டியைச் சேர்ந்த
நம்மாழ்வார் 42, 180 மி.லி., அளவு கொண்ட 11 பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தார். அவர்களை சோதனை செய்த போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X