பொது செய்தி

தமிழ்நாடு

விஞ்ஞானிகள், விவசாயிகள் கலந்துரையாடல்

Added : நவ 11, 2019
Share
Advertisement

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளுடன் வேளாண் விஞ்ஞானிகள்
கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

விருதுநகர் வேளாண் துணை இயக்குநர் விஜயா தலைமை வகித்தார். வேளாண் துணை
இயக்குனர் (மத்திய திட்டம்) வனஜா முன்னிலை வகித்தார். உதவி இயக்குனர்செல்வராணி
வரவேற்றார். கோவிலாங்குளம் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் ராஜவேல், திட்ட
ஒருங்கிணைப்பாளர்விஜயலட்சுமி பேசினர்.

பேராசிரியர்கள் குணசேகரன், மாரீஸ்வரி பயிர்களுக்கு வரும் நோய்கள், அதை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி விளக்கினர். பேராசிரியர் துரைசிங் உழவியல் ஆலோசனைகள், விதை நேர்த்தி பற்றி எடுத்துரைத்தார்.

பேராசிரியர் ராஜதுரை தோட்டக் கலை, பேராசிரியர் முருகன் கால்நடைகள் வளர்ப்பு பற்றியும், பேராசிரியர் விஜயகுமார் அசோலா வளர்ப்பு பற்றி கூறினார். விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, நரிக்குடி,
ரெட்டியபட்டி விவசாயிகள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை உதவிதொழில் நுட்ப மேலாளர் முனீஸ்வரி செய்தார்.தொழில் நுட்ப மேலாளர் முத்துச்செல்வி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X