சகதிக்காடான ரோடு; சறுக்கும் வாகனஓட்டிகள் சங்கடத்தில் கே.கே.எஸ்.எஸ்.என்., நகர் மக்கள்

Added : நவ 11, 2019
Advertisement

விருதுநகர்:ரோட்டின் நடுவில் மின்கம்பம், சாலை முழுவதும் சகதி, சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி துாண்கள், வீணாகும் குடிநீர், சீரமைக்கப்படாத தரைப்பாலம் என பல்வேறு
பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் கே.கே.எஸ்.எஸ்.என்., நகர் மக்கள்.

விருதுநகர் பாண்டியன் நகர் அருகே கே.கே.எஸ்.எஸ்.என்., நகர் உள்ளது. இங்கு 1,500 மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மெழுகுவர்த்தி கம்பெனி தெரு சகதி காடாய் காட்சி அளிக்கிறது.
பொதுமக்கள் டூவீலர்களில் சென்றுவர முடியாமல் திணறுகின்றனர். மேலும் நடுரோட்டில் மின்கம்பம் இருக்கிறது. இதை அகற்றக்கோரி பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இரவில் வரும் வாகனங்கள் மின்கம்பத்தில் மோதி விபத்தை சந்திக்கின்றன. மயான ரோடு ஜல்லி கற்கள் மட்டும் போட்ட படி குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மயானம் செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர். காளவாசல் தெருவில் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் வண்டிகளில் வரும் குடிநீரை கூட வாங்க 500 மீட்டர் துாரம் அலைய வேண்டியுள்ளது. சீரமைக்கப்படாத இந்த தரைப்பாலத்தால் மழைநேரங்களில் விபத்தும்
ஏற்படுகிறது.

தரைப்பாலம் சேதம்

காளவாசல் தெருவில் உள்ள ஒரே ஒரு வாறுகாலுக்கான தரைப்பாலமும் சேதமடைந்து
காணப்படுகிறது. டூவீலர் செல்லும் அளவு மட்டுமே இடம் உள்ளது. மழைநேரங்களில் வாறுகால் பெருகி ஓடும் போது, சிலர் சிறிய பள்ளம் என நினைத்து கடக்க முயன்று விபத்தில்
சிக்குகின்றனர்.

-சாரதா, டெய்லர்

என்னதான் தீர்வோ

மேல்நிலை தொட்டியில் குடிநீர் வீணாகி கொண்டே இருக்கிறது. ஊராட்சியில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் எந்நேரமும் வெளியேறிக் கொண்டிருப்பதால் 4 துாண்களும் சேதமடைந்துவிட்டது. இப்படியே போனால் எங்கள் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

-மாரீஸ்வரன், கொத்தனார்

ரோடால் வேதனை
மயான ரோட்டை போட்டு தர ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். மயானத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் திணறுகின்றனர். சகதி ரோடால் அடிக்கடி விபத்து
ஏற்படுகிறது. கனரக வாகனங்கள் சிக்கி கொண்டால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து
நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.

-ருக்மணி, குடும்பத்தலைவி
மலைபோல் குப்பை

தெருக்களில் வாறுகால் இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறோம். குப்பை ஆங்காங்கே கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. குப்பையும் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள், குழந்தைகளுக்கு நோய்வாய்ப்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

-பாப்பாத்தி, குடும்பத்தலைவி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X