பொது செய்தி

தமிழ்நாடு

மாசில்லா ஸ்ரீவில்லிபுத்தூர்: மருத்துவமனையில் மூலிகைத்தோட்டம்; வழிகாட்டிய அரசு டாக்டர்கள்

Added : நவ 11, 2019
Advertisement

இன்றைய உலகில் நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசடைந்து வருகிறது. மனித சமுதாயம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களினால் மாசுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. எதிர்கால, மனித சமுதாயம் நோயற்ற சமுதாயமாக வாழ வேண்டும் எனில், இன்றே மாசற்ற சூழ்நிலையை உருவாக்க, நாம் அதற்கான செயல்பாட்டை துவக்க வேண்டும்.

நம்முடைய அன்றாட வாழ்வில் விடிகாலை முதல் இரவு வரை பயன்படுத்தும் பொருளினால் ஏற்படும் சுகாதாரக்கேடுகளும், மாசுக்களும் நகராட்சி உரக்கிடங்குகளில் குப்பை மலையாய் அதிகரித்து வருகிறது. குப்பையை கிணறுகளிலும், குளத்திலும், ஆறுகளிலும், கொட்டுவதால் இன்று கிராமங்கள் முதல் நகரங்கள் வரையுள்ள நீர்நிலைகள் மாசடைந்து வருகிறது.

அதிகளவில் பயன்படுத்தபடும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் புகையினால் காற்று மாசுபடுகிறது. தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகையினை கட்டுபடுத்த, நவீன தொழில்நுட்பங்கள் முறையாக பயன்படுத்தாததால், காற்றில் மாசுக்களின் அளவு அதிகரித்து மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை. இவ்வாறு நிலம், நீர், காற்று மாசுபடுவதை தடுக்க, மரங்கள் அதிகளவில் வளர்ப்பது மிகவும் அவசியம்.

இவ்வாறு மாசுக்களை அகற்றி, மக்கள் நோயின்றி வாழ ஒரு புதிய முயற்சியினைமேற்கொண்டு உள்ளனர் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும்
பணியாளர்கள்.இங்கு பொதுமக்களுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,
சித்தமருத்துவமனை அருகே மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவ
செடிகளின் பயன்கள் குறித்த விபரங்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சமையலறை அருகே ஒரு காய்கறி, வாழை தோட்டமும் அமைக்கப்பட்டு, ஒரு பசுமை மருத்துவமனையாக மாறி வருகிறது ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை.

நல்உள்ளங்களின் உதவி

உள்ளூரை சேர்ந்த பல நல்ல உள்ளங்களின் உதவியால், மாசுக்கள் இல்லாத மருத்துவமனையாக, இந்த மருத்துவமனையை மாற்றி வருகிறோம். நோயாளிகளுடன் வருபவர்கள் இருக்க தனியிடம் உட்பட பல வசதிகள் உள்ளது. இந்நிலையில் மாசுக்கள் இல்லாத
மருத்துவமனையாக மாற்ற, மூலிகை தோட்டம் மற்றும் காய்கறி தோட்டம் அமைத்துள்ளோம். இதனால் காற்று மாசு இல்லாமல், மருத்துவமனையில் எந்த துர்நாற்றமும் இல்லாதநிலையை ஏற்படுத்த நினைக்கிறோம். மக்களின் ஒத்துழைப்பால் மாசற்ற மருத்துவமனையை
உருவாக்குவோம்.

-காளிராஜ், அரசு டாக்டர்,

ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை.

சுத்தமான காற்றை சுவாசிப்போம்
அறிந்தும், அறியாமலும் நாம் ஒவ்வொருவரும் தினமும் மாசுக்களை ஏற்படுத்தும்
பொருட்களை பயன்படுத்துகிறோம். இதனால் சிறுதுளி, பெருவெள்ளம் போல மாசுக்கள்
மலைபோல் குவிந்து வருகிறது.இதனை உணர்ந்து எதிர்கால மனித நலனுக்காக, மாசற்ற பொருட்களை பயன்படுத்துவோம். மாசுக்கள் ஏற்படுத்தும் பொருட்களின் பயன்பாட்டை
தவிர்ப்போம். இதனால் புவிவெப்பம் குறையும். மரங்களை வளர்த்து, சுத்தமான காற்றை
சுவாசிப்போம்.

-முத்துராமலிங்ககுமார்,

முன்னாள் ரோட்டரி தலைவர்,

ஸ்ரீவில்லிபுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X