பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் வருது 'அம்மா' விளையாட்டு மையம்

Added : நவ 11, 2019
Advertisement


கிராமங்களில் விளையாட்டுக்கு எந்த வகையில்முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது ?



அனைத்து பேரூராட்சி, ஊராட்சிகளில் அம்மா விளையாட்டு மையம் அமைக்க அரசு
உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கிராம இளைஞர்களின் விளையாட்டு திறன் மேம்படும்.தலைமை பண்பு, கூட்டு மனப்பான்மையை வளர்ப்பது, திறமையான இளைஞர்கள் கண்டறிந்து உயர்மட்ட போட்டிகளில் பங்கேற்க செய்வது இம்
மையத்தின் பணியாகும். ஆண், பெண் என இருபாலருக்கும் இம்மையம் அமைக்கப்படும். 75 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கபடி, கையுந்து பந்து, கிரிக்கெட், பூப்பந்து உள்ளிட்ட 4 விளையாட்டுகளில் ஏதேனும் 3ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் அதற்கான களங்கள் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சிகள், 9 பேரூராட்சிகளிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.



பள்ளிகளில் விளையாட்டுத்துறையால் அளிக்கப்படும் ஊக்குவிப்புகள் என்ன...?



மாவட்டத்தில் தொடர்ந்து பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிசம்பரில் உலக திறனாய்வு கண்டறியும் போட்டி நடக்க உள்ளது. 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

முதலில் எழுத்து தேர்வு வைக்கப்படும் .எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு திறனாய்வு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கும். வெற்றி பெறும் மாணவர்கள்
மண்டல போட்டியில் பங்கேற்பர். இறுதி போட்டிகளில் வெற்றி பெற்றால் ரூ.6 ஆயிரம் ஊக்க தொகை வழங்கப்படும்.


விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பொது மக்களும் பயிற்சியில் பங்கு பெற வசதிகள் உள்ளதா?



அரங்கில் விரைவில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட உள்ளது. தேவையற்ற புற்கள்
அகற்றும் பணியும் நடக்க உள்ளது. இங்கு நீச்சல் அகாடமியும் சிறப்பாக செயல்பட்டு
வருகிறது.மாணவர்களும் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் சாதித்து
வருகின்றனர். மாவட்ட அளவில் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர ஜிம்,
உள்விளையாட்டு அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ளது. உரிய கட்டணம் செலுத்தி பொதுமக்களும் பயிற்சியில் ஈடுபடலாம்.



மாவட்டத்தில் விளையாட்டு விடுதி எந்த நிலையில் உள்ளது...?



விளையாட்டு விடுதி என்பது மாவட்டத்திற்கு அத்தியாவசியமானது. இதன் மூலம் அதிக
இளைஞர்கள், மாணவர்கள் பயன்பெற முடியும். விடுதியில் தங்கி பயிற்சி மேற்கொள்ளபட்டால் மாநில போட்டிகளில் ஜெயிக்கும் விருதுநகர் மாணவர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும். விளையாட்டு விடுதி அமைப்பதற்கான ஆவண நடைமுறைகள் செயல்பாட்டில் உள்ளது. அடுத்தாண்டு அறிவிப்பு வர வாய்ப்புள்ளது.


பயிற்றுனர்கள் பற்றாக்குறையாக உள்ளதே.எப்போது நிவர்த்தி
செய்யப்படும்?



தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் பயிற்றுனர்கள் பற்றாக்குறை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பயிற்றுனர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

பா.ராஜா

மாவட்ட விளையாட்டு அலுவலர்

விருதுநகர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X