பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோக்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை தேவை

Added : நவ 11, 2019
Advertisement
 ஆட்டோக்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை தேவை

பண்ருட்டி:பண்ருட்டி முக்கிய சாலைகளில், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்ருட்டி ராஜாஜி சாலை, 20 அடி அகலத்திலும் சில இடங்களில் 15 அடி அகலத்திலும் குறுகலான சாலையாக உள்ளது. இந்த சாலையில் நான்கு முனை சந்திப்பு முதல் வரதராஜ பெருமாள் திருத்தேர் நிற்கும் இடம் வரை, ஒரு வழி சாலையாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த குறுகிய சாலையின் ஒரு புறம், 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு, பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.பொதுமக்களுக்கு இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது என, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், மாற்று இடத்தில் ஆட்டோக்கள் நிறுத்த முடிவு செய்தனர்.
மாற்று இடத்தில் நிறுத்தாமல், மீண்டும் ராஜாஜி சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்தால் மட்டும் போதும் என்கிற நோக்கில் பணி செய்வதால், போக்குவரத்து இடையூறு தொடர்கிறது.போலீஸ் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X