பொது செய்தி

தமிழ்நாடு

பாலத்தில் மணல் குவியல் விபத்து ஏற்படும் அபாயம்

Added : நவ 11, 2019
Advertisement
 பாலத்தில் மணல் குவியல்  விபத்து ஏற்படும் அபாயம்

கடலுார்:கடலுார் அண்ணா பாலத்தில் மணல் குவிந்து கிடப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலுார் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள அண்ணா பாலத்தில், தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள், லாரிகள், வேன்கள் செல்கின்றன. இந்த பாலத்தின் இரு புறமும், சாலை ஓரத்தில் மணல் குவிந்து கிடக்கிறது.இதனை நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் அவ்வப்போது அகற்றுவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாக மணல் குவியலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மணல் குவியல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிச் செல்லும் போது, மணல் குவியலில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கீழே விழுந்து காயமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.காற்று வீசும் போது, மணல் புழுதி பறப்பதால், வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையோரம் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X