மங்கலம்பேட்டை:அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மூன்று ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் கழிவறையை, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, கர்னத்தம், பள்ளிப்பட்டு, ரூபநாராயண நல்லுார், கோ.பூவனுார், பெரியவடவாடி, எடைச்சித்துார், காட்டுப்பரூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.பொதுமக்கள் நலன் கருதி, மருத்துவமனை வளாகத்தில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கழிவறை கட்டப்பட்டது. இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் அவலம் உள்ளது. எனவே, பூட்டிக்கிடக்கும் கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE