பொது செய்தி

தமிழ்நாடு

பிரதோஷ வழிபாடு

Added : நவ 11, 2019
Advertisement

மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு, சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
காலை 10:00 மணிக்கு மாத்ருபுரீஸ்வர் சுவாமிக்கு அபி ேஷக ஆராதனை, காலை 11:30 மணியளில் பால், சந்தனம், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், திரவியப் பொடி உள்ளிட்ட திரவியங்களால் நந்தி பகவானுக்கு அபி ேஷகம் நடந்தது. மாலை 5:00 மணியளவில் சந்தன காப்பு அலங்கரத்தில் நந்தி பகவான் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.நடுவீரப்பட்டுநடுவீரப்பட்டு கைலாசநாதர், சி.என்.பாளையம் சொக்கநாதர், மலையாண்டவர் கோவில்களில் பிரதோஷ பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவில், சி.என்.பாளையம் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவில், மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் சனிபிரதோஷ பூஜை நடந்தது.பூஜையை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு விநாயகர்,பிரதோஷ நாயகர், நந்தி, ஈஸ்வரர், அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.பெண்ணாடம்சனிக்கிழமை பிரதோஷத்தையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு முன் மண்டப வளாகத்தில் உள்ள அதிகார நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம்; காலை 8:30 மணிக்கு அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, மாலை 4:45 மணியளவில் கொடிமரம் அருகே உள்ள நந்தி பகவானுக்கு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. இதேபோல், இறையூர் அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X