பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு கற்பித்தல் தர மேம்பாடு பயிற்சி முகாம்

Added : நவ 11, 2019
Share
Advertisement
சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக்கழக வேதிப்பொறியியல் துறையில், பேராசிரியர்களுக்கு கற்பித்தல் தர மேம்பாடு பயிற்சி முகாம் நடந்தது. சிதம்பரம் அண்ணாமாலை பல்கலைக்கழக பொறியியல் புலம் மற்றும் பல்கலைக்கழக உள்தர உத்திரவாத மையம் சார்பில், வேதிப்பொறியியல் துறை பேராசிரியர்களுக்கு, கற்பித்தல் தர மேம்பாடு பயிற்சி முகாம் நடந்தது.கல்வியியல் புல முதல்வர் ஞானதேவன், பயிற்சி முகாமை

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக்கழக வேதிப்பொறியியல் துறையில், பேராசிரியர்களுக்கு கற்பித்தல் தர மேம்பாடு பயிற்சி முகாம் நடந்தது.
சிதம்பரம் அண்ணாமாலை பல்கலைக்கழக பொறியியல் புலம் மற்றும் பல்கலைக்கழக உள்தர உத்திரவாத மையம் சார்பில், வேதிப்பொறியியல் துறை பேராசிரியர்களுக்கு, கற்பித்தல் தர மேம்பாடு பயிற்சி முகாம் நடந்தது.கல்வியியல் புல முதல்வர் ஞானதேவன், பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.வேதிப்பொறியியல் துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். பல்கலைக்கழகத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.பேராசிரியர்கள் அம்பேத்கர், சமுத்திர ராஜ்குமார், புதுச்சேரி பல்கலைக் கழக கல்வியியல் துறை தலைவர் மும்தாஜ் பேகம், கோவை ரெனி ஆக்ஸிலியா மற்றும் யோகா மையம் இயக்குனர் ஜெயந்தி ஆகியோர் கற்பித்தல் உத்திகள், தொடர்பு திறன்கள், புறநிலை அடிப்படையில் கல்வி மற்றும் மதிப்பீடு கற்பித்தலில் யோகா நுட்பங்கள், நுண்ணிய கற்றல் முறைகள், சிரமமின்றி கற்பித்தல் மேலாண்மை உள்ளிட்ட பல தலைப்புகளில் கருத்துரை வழங்கினர். வேதிப் பொறியியல் துறை பேராசிரியர்கள் ராம்செந்தில், சிவப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X