பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறன் மாணவர்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு பயிற்சி

Added : நவ 11, 2019
Share
Advertisement

சிதம்பரம்:குமராட்சி ஒன்றிய ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில், பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்தின் மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி, சிதம்பரம் வடக்கு வீதி நகராட்சி பள்ளியில் நடந்தது.
குமராட்சி வட்டார கல்வி அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு பயிற்சியாளர்கள் அருட்ஜோதி வள்ளலார், ஸ்டாலின், புவனேஸ்வரி, திலகவதி, கவிதா, கலைமதி மற்றும் இயன் முறை மருத்துவர் ஆதித்யா ஆகியோர், ஊனத்தின் வகைகள், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தின் செயல்பாடுகள், மாணவர்கள் கற்றல் திறன், படிப்பு நிலைகள், பாட இணை செயல்பாடுகள் போன்றவை குறித்து கருத்துரை வழங்கினர்.வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயக்குமார் ஜான்சன், தமிழ்மணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் மல்லிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X