தமிழ்நாடு

தள்ளிப்போகிறது: விமான ஓடுபாதை நில ஆர்ஜித பணிகள்; இழப்பீடு வழங்குவதிலும் இழுபறி

Added : நவ 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 தள்ளிப்போகிறது: விமான ஓடுபாதை நில ஆர்ஜித பணிகள்; இழப்பீடு வழங்குவதிலும் இழுபறி

மதுரை:மதுரையில் விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்காக நில ஆர்ஜித பணிகள் நீதிமன்ற வழக்குகளால் தள்ளிப்போகிறது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதிலும் இழுபறி நிலவுகிறது.


விமான நிலையத்தில் தற்போது ஓடுபாதை 7500 அடியாக உள்ளது. சர்வதேச விமானங்களை இயக்க ஏதுவாக இதை 12 ஆயிரம் அடியாக நீட்டிக்க தேசிய விமான போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதற்காக தேவைப்படும் நிலங்களை ஆர்ஜிதம் செய்து வழங்க மாநில
அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி பெருங்குடி, சின்னஉடைப்பு, பாப்பனோடை உள்ளிட்ட ஆறு கிராமங்களில் 615 ஏக்கர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு ஆர்ஜிதம் செய்யப்பட்டன.

நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க மாநில அரசும் ரூ.160 கோடி ஒதுக்கியது. ஆனால் நில உரிமையாளர்களில் சிலர் இழப்பீடு தொகையை உயர்த்தி தரக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரண்டாயிரம் பேருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நில ஆர்ஜிதம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதனால் நிலங்களை ஆர்ஜிதம் செய்யும் பணி தள்ளிப் போகிறது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு முழுமையாக வழங்கப்பட்டு நிலங்கள் ஆர்ஜிதம் செய்து தேசிய விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதன் பிறகு தான் ஓடுபாதை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள முடியும்.

வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: நவ., இறுதிக்குள் உச்சநீதிமன்ற வழக்கு
முடிவிற்கு வரும். அதன் பிறகு நிலுவையிலுள்ள இழப்பீடு நில உரிமையாளர்களுக்கு
வழங்கப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்படும். இப்பணிகளை இந்தாண்டு இறுதிக்குள்
முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
11-நவ-201915:43:52 IST Report Abuse
r.sundaram இந்த நூற்றாண்டுக்குள்ளாவது இது நடந்தால் சரி. ஏனென்றால் நில ஆர்ஜித விஷயத்தில் அரசின், அலுவலர்களின் செயல்பாடு அப்படி.
Rate this:
Share this comment
Cancel
மணி - புதுகை,இந்தியா
11-நவ-201914:03:29 IST Report Abuse
மணி புதுக்கோட்டைல ஒரு ஏர்போர்ட் போடுங்க சார் அப்பொறம் பொண்ணமாயாவதி இந்தப்பக்கம் கீரனூருக்கு ஒன்னு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X