மாநில பெண்கள் கபடி போட்டிக்கு தேர்வு

Added : நவ 11, 2019
Advertisement
 மாநில பெண்கள் கபடி போட்டிக்கு  தேர்வு

கடலுார்:தமிழ்நாடு சப் ஜூனியர் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் மற்றும் ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்கான வீராங்கனைகள் தேர்வு செய்வதற்கான போட்டி, கடலுாரில் நடந்தது.
தமிழ்நாடு சப் ஜூனியர் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி வரும் 15ம் தேதி முதல் 17 ம் தேதி வரை ஜோலார்பேட்டையில் நடக்கிறது. அதே போல் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 29 ம் தேதி முதல், டிசம்பர் 1ம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் நடக்கிறது.இந்த போட்டிகளில் கலந்துகொள்ள மாவட்ட அணி தேர்வு கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.இதில் மாவட்டம் முழுவதிலிருந்து 240 வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 16 வயதிற்குட்பட்டோர் அணிக்கான 12 பேரும், 20 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் 12 பேரும் நேற்றைய போட்டியில் தேர்வு செய்யப்பட்டனர்.மாவட்ட கபடி கழக செயலர் நடராஜன், மணிபாலன், பயிற்சியாளர்கள் புஷ்பராஜ், என்.எல்.சி., பயிற்சியாளர்கள் ரவிச்சந்திரன், ஜோதி, நடுவர்கள் தனசேகர் மற்றும் உற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X