பொது செய்தி

தமிழ்நாடு

பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

Added : நவ 11, 2019
Advertisement
 பொறியியல் கல்லூரி  பேராசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பொறியியல் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, மின்னணு கருவியியல் துறையில், மென் கணக்கீட்டு தொழில் நுட்பங்கள் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் பொறியியல் புலம் மற்றும் அகில இந்திய தொழில் நுட்ப கழகம் (ஏ.ஐ.சி.டி.இ.,) சார்பில், மின்னணு மற்றும் கருவியியல் துறை பேராசிரியர்களுக்கு 'கட்டுப்பாட்டு பொறியியல் பயன்பாட்டில் வளர்ந்து வரும் மென் கணக்கீட்டு தொழில் நுட்பங்கள்' குறித்த பயிற்சி, மின்னணு துறையில் நடந்தது. தென்னிந்திய அளவில், பல்கலைக்கழகம் மற்றும் பொறியியல் கல்லுாரிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு மின்னணு துறையில் சிறந்து விளங்கும் 15 அறிஞர்கள் பயிற்சி அளித்தனர்.இதன் நிறைவு விழாவிற்கு, பொறியியல் புல முதல்வர் ரகுகாந்தன் தலைமை தாங்கினார். பேராசிரியர் கயல்விழி வரவேற்றார். பல்கலைக் கழக பதிவாளர் கிருஷ்ணமோகன், பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட பேராசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.சென்னை சீமன்ஸ் நிறுவன முதுநிலை மேலாளர் அருண்குமார் பழனியப்பன், அமிர்தபுரி அமிர்த விஸ்வ வித்யாபீடம் கல்லுாரி பேராசிரியர் ரவிக்குமார் பன்டிட், பெங்களூரு டேடா சைன்ஸ் நிறுவன மேலாளர் அருண்குமார், சென்னை செயின்ட் ஜோசப் இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் ரஜினிகாந்த், அண்ணா பல்கலைக்கழக மின்னணு துறை பேராசிரியர்கள் சதிஷ்குமார், பிரகாஷ், புதுச்சேரி பொறியியல் கல்லுாரி பேராசிரியர் அனந்த நடராஜன், மேத் ஒர்க்ஸ் அப்ளிகேஷன் இன்ஜினியர் ராஜ்குமார் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் பழனிவேல், ஜோதி லட்சுமி, சக்திவேல் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X