சாலை விதியா, மரண வழியா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சாலை விதியா, மரண வழியா' விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

Added : நவ 11, 2019
Share
 'சாலை விதியா, மரண வழியா' விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

புவனகிரி:மாவட்ட காவல்துறை சார்பில்'சாலை விதியா, மரண வழியா' என்ற தலைப்பில், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
சாலை விபத்தை குறைக்கும் நோக்கில் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில், போலீசார் சார்பில் 'சிறப்பு விழிப்புணர்வு கலைக்குழு' நியமிக்கப்பட்டுள்ளது.இக்குழு மாவட்டம் முழுவதும், பொதுமக்கள் கூடுமிடம் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது.புவனகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் பஸ் நிலையம் சந்திப்பு அருகில், நேற்றுமுன்தினம், இக்கலை குழு சார்பில், வில்லுப்பாட்டுடன் கூடிய சிறப்பு கலை நிகழ்ச்சி நடந்தது.
மருதுார் போலீஸ் நிலைய ஏட்டு பொன்சிவபெருமான் தலைமையிலான கலைக்குழுவில், கடலுார் ஆயுதப்படை போலீசார் ஏழு பேர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.கடலுார் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவு ஏட்டு கணேஷ் எழுதிய விழிப்புணர்வு வில்லுப்பாட்டு பாடப்பட்டது.குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்பு, ஹெல்மெட் அணிவதன் அவசியம், ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் சாலை விதிகள் ஆகியவற்றின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X