டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

Added : நவ 11, 2019
Share

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால், சுகாதார துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் பனந்தோப்பு தெருவை சேர்ந்தவர் விநாயகம் மனைவி முத்துலட்சுமி,35. இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் முத்துலட்சுமிக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி நகராட்சி கமிஷனர் பிரபாகரன் சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பனந்தோப்பு பகுதியில் வீடு வீடாக சென்று சுகாதார நடவடிக்கை மேற்கொண்டனர். காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். நகரில் தொடர்ந்து டெங்கு காய்ச்ச பாதிப்பு ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் சேரும் குப்பை, பனந்தோப்பு தெருவுக்கு அருகில் உள்ள குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது. இவற்றில் அதிகளவு உள்ள பிளாஸ்டிக் பைகளில், தேங்கி நிற்கும் தண்ணீரிலேயே டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகின்றன.எனவே, முதலில் குப்பையை முறையாக அகற்ற வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்க வேண்டும். நகரத்தை தூய்மையாக வைத்திருந்தால் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X