சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் கம்பெனியில் தவறி விழுந்து இறந்த தொழிலாளி

Added : நவ 11, 2019
Advertisement
 தனியார் கம்பெனியில் தவறி விழுந்து இறந்த தொழிலாளி

கடலுார்:தனியார் கம்பெனியில், தவறி விழுந்து இறந்த தொழிலாளியின் உறவினர்கள், இழப்பீடு கேட்டு சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் அடுத்த அருங்குணம் குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன் மகன் சந்துரு,23. இவர் கடலுார் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.சந்துரு நேற்று முன்தினம் மதியம் கம்பெனியின் மேல்தளத்தில் வேலை செய்த போது, தவறி விழுந்து இறந்தார்.இந்நிலையில், கடலுார் அரசு மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினர்களுக்கு சந்துருவின் உடலை பார்க்க அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலர் முல்லைவேந்தன் தலைமையில், கடலுார் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.இறந்தவர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு, உடலை பார்க்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இன்ஸ்பெக்டர்கள் பால்சுதர், உதயகுமார் மற்றும் போலீசார், கம்பெனி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.கம்பெனி நிர்வாகம் மற்றும் இறந்த வாலிபரின் குடும்பத்தினர், கடலுார் தாசில்தார் செல்வக்குமார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த, இன்ஸ்பெக்டர்கள் பால்சுதர், உதயகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடுஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X