பொது செய்தி

இந்தியா

உலகின் உயரமான சிவலிங்கம் திறப்பு

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (26)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்:தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள சிவ பார்வதிகோவிலில் உலகின்
உயரமான சிவலிங்கம் பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.latest tamil news


குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியான கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், உதயம் குளம் அருகே உள்ள செங்கல் சிவபார்வதி கோயிலில், 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் அமைக்கப்பட்டு, வழிபாட்டுக்கு திறந்து விடப்பட்டது.கேரளாவின் திருவனந்தபுரம் அருகே செங்கல் பகுதியில் மகேஸ்வரம் சிவ பார்வதி கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் நிர்வாகம் கடந்த 2012ல் மிகப்பெரிய சிவலிங்கம் அமைக்க முடிவு செய்தது.அதன்படி தற்போது ரூ. 10 கோடி மதிப்பீட்டில் சிவலிங்கம் கட்டப்பட்டுள்ளது.


latest tamil newsசிவலிங்கத்தின் மொத்த உயரம் 111.2 அடி. இந்த சிவலிங்கம் எட்டு அடுக்குகளாக
அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கிலும் தியான மண்டபங்களும் சிவலிங்கத்தின் உள்ளே குகைக்குள் செல்வது போன்றும் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலும் கடவுள் சிலைகளும் அகத்தியர் பரசுராமர் சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தரைதளத்தில் பக்தர்கள் வழிபட சிவலிங்க சிலையும். எட்டாவதுஅடுக்கில் கைலாய மலையில் சிவன் பார்வதி தியானம் செய்வது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது.இது இந்தியா புக் ஆப் ரிக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆப் ரிக்கார்டில் இடம் பிடித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10thnovember73 - kancheepuram,இந்தியா
11-நவ-201916:27:31 IST Report Abuse
10thnovember73 உலகத்தில் இருக்கும் ஏழு கிலோமீட்டர் உயர சர்ச்சுகளை எல்லாம் இடித்து விட்டு வந்து எங்களுக்கு இந்த பாடம் நடத்துங்கள்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-நவ-201916:20:28 IST Report Abuse
Endrum Indian ஐயப்பனுக்கு எதிராக இருந்த பினராயி விஜயன் இதற்கு எப்படி ஒத்துக்கொண்டார்
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11-நவ-201914:18:01 IST Report Abuse
A.George Alphonse இறைவனுக்கு உகந்தது நல்ல உள்ளமும், மனிதர்களுக்கு தகுந்த சமயத்தில் உதவி செய்வதும்தான். அவர் ஒருபோதும் தனது உருவ மகா உயர்த்த சிலையை கேட்டது இல்லை.
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
11-நவ-201915:20:05 IST Report Abuse
Pannadai PandianIRAIVANUKKU PIDIKKAATHATHU madha maatram….....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X