சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வண்டு தாக்கிய இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் அனுமதி

Added : நவ 11, 2019
Share
Advertisement

கடலுார்:பஸ்சில் பயணம் செய்த இன்ஸ்பெக்டரை, வண்டு கொட்டியதால், கடலுார் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விழுப்புரம் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் குமரையா,52. இவர் நேற்று காலை, வேலை காரணமாக விழுப்புரத்திலிருந்து, கடலுாருக்கு தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.தோட்டப்பட்டு அருகே வந்தபோது, பஸ்சில் புகுந்த விஷ வண்டு குமரையாவை கொட்டியது. வலியால் துடித்த அவர், கடலுார் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்கடலுார் அடுத்த கீழ் கவரப்பட்டு, எஸ்.கே.பாளையத்தைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மனைவி ரேவதி,47: இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள கொய்யா மர தோப்பிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த விஷ வண்டு அவரை தாக்கியது. கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X