சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் தகராறு காத்திருந்த பயணிகள்

Added : நவ 11, 2019
Advertisement

திருமங்கலம்:போக்குவரத்து கழக முன்னாள் ஊழியருக்கும், தற்போதைய கண்டக்டருக்கும் ஏற்பட்ட தகராறால் திருமங்கலம் வெளியூர் பஸ் ஸ்டாண்டில்பஸ் நிறுத்தப்பட்டு ஒரு மணி நேரம் பயணிகள் காக்க வைக்கப்பட்டனர்.

மதுரை எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் இருந்து ராஜபாளையத்திற்கு சென்ற அரசு பஸ்சில்
டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்து ஊழியர் சங்கரன் 59, பயணித்தார்.
அவரிடம் கண்டக்டர் டிக்கெட் எடுக்க சொன்னபோது, தானும் போக்குவரத்து ஊழியர்தான் என்று கூறி ஜெராக்ஸ் காப்பி பாைஸ காண்பித்தார். அது செல்லாது என கண்டக்டர் கூறியதையடுத்து, இருவருக்கும் தகராறு ஏற்பட்டு சங்கரன் மூக்கு உடைந்தது.
சங்கரன் அலைபேசியில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.பஸ் திருமங்கலம் வந்தபோது, பஸ்சின் பின்னால் காரில் வந்த சங்கரனின் உறவினர்கள் திருமங்கலம் வெளியூர் பஸ் ஸ்டாண்டில்பஸ்சை மறித்தனர். அதற்குள் திருமங்கலம் போலீசாரும் வந்து
இருதரப்பினரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

அங்கு வந்த திருமங்கலம் பஸ் டிப்போ மேலாளர் கார்த்திகேயன் இருவரிடமும் சமாதான
பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இருதரப்பினரும் புகார்தெரிவிக்காமல்
சமாதானமாக சென்றனர்.இதனால் பயணிகள் ஒரு மணி நேரம் காத்து இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X