பொது செய்தி

தமிழ்நாடு

சர்வீஸ் ரோட்டிற்கு இடம் ஒதுக்கீடு

Added : நவ 11, 2019
Advertisement

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் நுழைவு பகுதி சுரங்கப்பாதை அருகே சர்வீஸ் ரோடு அமைக்க மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி கழிவுநீர்
கால்வாயும் சீரமைக்கப்பட்டுள்ளது.

இங்கு மேம்பாலம் அருகே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு முன்பே
போக்குவரத்து துவங்கியது.திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி பகுதியினர் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, கூடல்மலைத்தெரு பகுதிகளுக்கு செல்ல சுரங்கப்பாதையையொட்டிய சர்வீஸ் ரோடு அமைக்க இடவசதியில்லாததால் பணிகள் துவங்கவில்லை.

சுரங்கப்பாதை அமைக்கும்போது கழிவுநீர் குழாய் சேதமடைந்தது. இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் விசாகன் உத்தரவின்படி சர்வீஸ் ரோடு அமையும் ரோட்டையொட்டியிருந்த
மாநகராட்சி அலுவலகசுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு 13 அடி உள்பக்கமாககட்டப்பட்டது.அந்த இடம் சர்வீஸ் ரோடு அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாயும் சீரமைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X