கண்மாய் நீரில் மூழ்கும் 25 ஏக்கர் நெற்பயிர்கள்| Dinamalar

கண்மாய் நீரில் மூழ்கும் 25 ஏக்கர் நெற்பயிர்கள்

Added : நவ 11, 2019
Share

சோழவந்தான்:சோழவந்தான தென்கரை கண்மாயில் அதிகமாக தேக்கப்பட்ட நீரால் 25
ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இக்கண்மாய் மேற்கே காடுபட்டியில் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவிட்டு நெல் நடவு செய்துள்ளனர். இந்நிலையில் கண்மாயில் அளவிற்கு அதிகமாக தண்ணீர் தேக்குவதால் விவசாய நிலங்களை தண்ணீர் சூழ்ந்து நெற்பயிர்கள் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயி மின்னல்கொடி கூறியதாவது: கண்மாய் நீர்பிடிப்பு பகுதிக்கும் அதிகமாக நீர் தேக்கப்படுவதால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகும் நிலையுள்ளது என்றார்.பொதுப்பணித்துறை உதவிபொறியாளர் தளபதி கூறியதாவது: கண்மாய் நிரம்பி மறுகால்
பாய்கிறது. தாழ்வாக உள்ள விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தண்ணீரை

வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X