சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குப்பை ஆக்கிரமிப்பால் ஆற்றில் பிணம் புதைப்பு

Added : நவ 11, 2019
Advertisement
 குப்பை ஆக்கிரமிப்பால் ஆற்றில் பிணம் புதைப்பு

பண்ருட்டி:பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரை சுடுகாட்டில், குப்பையை கொட்டி வருவதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி நகரத்தில் 33 வார்டுகளில் 60 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தினந்தோறும் சேகரமாகும் 17 டன் குப்பை, கெடிலம் ஆற்றங்கரையை ஒட்டி உள்ள சுடுகாட்டில், கடந்த 10 ஆண்டுகளாக கொட்டி எரிக்கப்பட்டு வருகிறது.ஆற்றங்கரை சுடுகாட்டு பகுதியில் மலை போல் குவிக்கப்பட்டுள்ள குப்பையால், துர்நாற்றம் வீசுகிறது. சுடுகாட்டில் குப்பைகள் கொட்டுவதால் பிணம் புதைக்க கூட இடமில்லாமல், ஆற்றில் புதைக்கும் அவலம் நடந்து வருகிறது. தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. சுடுகாட்டையொட்டி பண்ருட்டி நகருக்கு ராட்சத போர்வெல் மூலம் குடிநீர் வழங்கும் நிலையம் அருகிலும் குப்பை கொட்டப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும், மக்காத குப்பை என தரம்பிரித்து விற்பனை செய்திடவும், குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கவும், அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது.
ஆனால் பண்ருட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், புதிய உரக்கிடங்கு அமைத்திட விழமங்கலம் சுடுகாட்டு பகுதியில் இடம் தேர்வு செய்தனர்.அப்பகுதி மக்கள் எதிர்ப்பின் காரணமாக உரக்கிடங்கு அமைக்கும் பணி கைவிடப்பட்டது.இதற்கு மாற்றாக, உரக்கிடங்கு அமைக்க தேவையான இடத்தை நகராட்சி அதிகாரிகள் தேர்வு செய்யாமல், காலம் தாழ்த்தி வருகின்றனர். நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம், நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X