பொது செய்தி

தமிழ்நாடு

விருதை - சேலம் சாலையில் ஆபத்து மரங்கள் அகற்ற கோரிக்கை

Added : நவ 11, 2019
Share
Advertisement
 விருதை - சேலம் சாலையில் ஆபத்து மரங்கள் அகற்ற கோரிக்கை

சிறுபாக்கம்:விருத்தாசலம் - சேலம் சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
.விருத்தாசலத்தில் இருந்து சின்னசேலம் கூட்டு ரோடு வரை, 55 கி.மீ., துாரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதன் வழியாக சிதம்பரம், விருத்தாசலம், வேப்பூர், ஆத்துார், கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கு அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன.சாலையையொட்டி அதிகளவில் புளிய மரங்கள் உள்ள நிலையில், ரெட்டாக்குறிச்சி, அரசங்குடி, அடரி, பெரியநெசலுார் உள்ளிட்ட பகுதிகளில், காய்ந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. பலத்த காற்று வீசும் போது, மரங்கள் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விருத்தாசலம் - சேலம் சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X