நிலவேம்பு கஷாயம் நாஜிம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நிலவேம்பு கஷாயம் நாஜிம் வழங்கல்

Added : நவ 11, 2019
 நிலவேம்பு கஷாயம் நாஜிம் வழங்கல்

காரைக்கால்:காரைக்காலில் தி.மு.க., சார்பில் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
காரைக்காலில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத் துறை மூலமாக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் கோத்துக்குளம் பகுதி யில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை தி.மு.க.அமைப்பாளர் நாஜிம் தலைமையில் மாணவர்களுக்கு வழங்கினார்.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் காளிதாஸ் வரவேற்றார். தி.மு.க., மகளிரணி அமைப்பாளர் வைஜயந்தி ராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர் சப்னா மோத்தி, கல்யாணி, உமா மற்றும் பொறுப்பாளர்கள் அமுதா ஆறுமுகம், சங்கர், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X